கெளதம புத்தர்

கெளதம புத்தர், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள் பதிப்பகம், பக்.144, விலைரூ.110. அகிம்சையின் அடையாளமாக அறியப்படும் கெளதம புத்தரின் பிறப்பு முதல் பரி நிர்வாணம் வரை அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கால வரிசைப்படி இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கெளதம புத்தரின் வரலாறாயினும் அவருக்கு முந்தைய தலைமுறையினரான சுத்தோதனர், சிம்மஹணு, ஜயசேனன் ஆகிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தை சித்தார்த்தனைப் பார்த்த அரண்மனை நிமித்திகர்கள், முதுமை, நோய், மரணம், துறவு இவற்றை அறிந்தால் இவன் துறவியாவான் என்று கூற, சித்தார்த்தனின் […]

Read more