நெஞ்சிருக்கும் வரை

நெஞ்சிருக்கும் வரை…. (நான் சந்தித்த ஆளுமைகள்), ஆர்.எஸ்.மணி, ஆரம் வெளியீடு, விலை: ரூ.180 ஆளுமைகள் முப்பது திண்டுக்கல்லைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர் ஆர்.எஸ்.மணி தான் வியந்த சமகால ஆளுமைகளைப் பற்றி பேஸ்புக்கில் அவ்வப்போது எழுதிவந்த சிறுகட்டுரைகளின் தொகுப்பு. மூன்று பேர் உட்காரும் அளவுக்குச் சிறிய வீட்டில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் மதுரை நன்மாறன், அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்ஏபி, நாற்பதாண்டுகளாய் எழுத்தும் வாசிப்புமாய்த் தீவிரமாக இயங்கிவரும் பேராசிரியர் அருணன் என்று பொதுவுடைமை இயக்கம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் […]

Read more

நீயும் நானும்

நீயும் நானும், கோபால்தாசன், ஆரம் வெளியீடு, பக். 138, விலை 100ரூ. கவிதையில் நெய்த கதை! காதலைக் கவிதையில் சொல்லுவர், இவரோ கவிதையில் ஒரு இனிய காதல் கதையைத் தருகிறார். இம்முயற்சி பாராட்டுக்குரியதாகும். எளிய தமிழ் நடையில் யதார்த்தமான பின்னணியில் சென்னைக் காதலின் மணம் வீசுகிறது. நடுத்தரக் குடும்பத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களின் பின்னணியில் கதை பயணிக்கிறது. எளிய நடையில் வழக்கத்தில் உள்ள சென்னைத் தமிழ் மற்றும் ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பது, இப்புத்தகம் அனைவரும் படித்து இன்புறக்கூடிய ஒன்று என்று […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. பல்வேறு வார இதழ்கள், மாத இதழ்களில் வெளியான ஆசிரியரின் 35 சிறுகதைகளின் தொகுப்பு. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வாழ்க்கைப் போராட்டங்களுமே கதைக்கான களமாக விரிகின்றன. மகிழ்ச்சி, சந்தேகம் பொறாமை, உறவுச் சிக்கல்கள் என எல்லாப் பின்னணிகளிலும் கதைகள் பயணிக்கின்றன. ஒரு குழந்தையின் மனதில் ஒருவர் இடம்பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இந்த நிலை மாறும்போது அந்தக் குழந்தையின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது ‘12 வயதுப் […]

Read more

முதல் வரிசை மூன்றவாது இருக்கை

முதல் வரிசை மூன்றவாது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, பக். 208, விலை 160ரூ. பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. ‘சுருக்’ கமாக ஒரு விஷயத்தைச் சொல்லி அதனைப்பற்றி அசைபோட வைப்பதில் தேர்ந்தவர் படுதலம் சுகுமாரன். இத்தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் அந்த ரகத்தைச் சேர்ந்ததே. அப்படிப்போடு அருவாளில் வரும் புவனாவாகட்டும், முதல் வரிசை மூன்றாவது இருக்கையில் வரும் ஜானகியா கட்டும் அன்றாட வாழ்வின் எதார்த்த பெண்களின் பிரதிபலிப்புகள். பெரும்பாலும் பெண்மையை, அவர்களின் ஆழ் மனதை எடை போடும் கதைகளே அதிகம். […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. ஆழமான சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர் படுதலம் சுகுமாரன். இந்தத் தொகுதியில் அவருடைய 35 கதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் நெஞ்சைத் தொடும் கதைகள். அநாவசியமாக வளர்த்தாமல், நாலைந்து பக்கங்களில் கதையை அடக்கி விடுவது இவருடைய சிறப்புகளில் ஒன்று. முதல் கதையான “மாப்பிளை”, 5 பக்கங்களில் பிரமாதமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு, சைதை முரளி, ஆரம் வெளியீடு, விலை 100ரூ. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பர். ஆனால் ‘ஏட்டுச் சுவடி தமிழுக்கு உதவும்’ என்பதை, கரையிலா இந்தச் சமுத்திரத்தில் நீந்தித் திளைத்து நம் தமிழின் பெருமையை மீட்டெடுத்து, எட்டுத் திக்கும் பரப்பியவர் “தமிழ்த்தாத்தா” உ.வே. சாமிநாதய்யர். தமிழுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட கொடையாளர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த தமிழ் பணிகள் பற்றியும், அவரது வாழ்க்கை பற்றியும் பல்வேறு தகவல்கள் […]

Read more