நெஞ்சிருக்கும் வரை

நெஞ்சிருக்கும் வரை…. (நான் சந்தித்த ஆளுமைகள்), ஆர்.எஸ்.மணி, ஆரம் வெளியீடு, விலை: ரூ.180 ஆளுமைகள் முப்பது திண்டுக்கல்லைச் சேர்ந்த இலக்கியச் செயல்பாட்டாளர் ஆர்.எஸ்.மணி தான் வியந்த சமகால ஆளுமைகளைப் பற்றி பேஸ்புக்கில் அவ்வப்போது எழுதிவந்த சிறுகட்டுரைகளின் தொகுப்பு. மூன்று பேர் உட்காரும் அளவுக்குச் சிறிய வீட்டில் வசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் மதுரை நன்மாறன், அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ்ஏபி, நாற்பதாண்டுகளாய் எழுத்தும் வாசிப்புமாய்த் தீவிரமாக இயங்கிவரும் பேராசிரியர் அருணன் என்று பொதுவுடைமை இயக்கம் சார்ந்த இலக்கிய ஆளுமைகளையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் […]

Read more