மௌனமாயொரு இடிமுழக்கம்
மௌனமாயொரு இடிமுழக்கம், ட்யுராங்கோ அதிரடி, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 250ரூ.
சம்மரைக் கொண்டாட சாகசங்கள் நிறைந்த விறுவிறு காமிக்ஸ்! புரட்சிப்படை, கூலிப்படை, அதிகார வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் ஆக்ரோஷமான சண்டைகள், சதிகள், கொடுமைகள் என்று வன்மேற்கின் ரத்தவெறி யுத்தங்களைப் படம்படமாக நகர்த்தி பிரமிக்கச் செய்யும் த்ரில்லர். பள்ஸ் காதல், பாசம், வீரம் நிறைந்த ட்ராஜெடி என்று, கோடை மலராக இரட்டை காமிக்ஸ்!
கதாநாயகன் ட்யுராங்கோவின் மின்னல் வேகமும், இடிமுழக்கமாக எதிரொலிக்கும் தோட்டாக்களின் சத்தமும் கோடை மழையாகவே காமிக்ஸ் பிரியர்களைக் கொண்டாடச் செய்யும் என்பது நிச்சயம்.
நன்றி: குமுதம், 16/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818