காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.144, விலை ரூ.135. தினமணியில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும், அவரின் தியாக வாழ்கையைத் தெரிந்து கொள்ளவும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன. காந்தியுடன் இணைந்து செயல்பட்ட நேரு, பட்டேல், ராஜாஜி ஆகியோருக்கும் காந்திக்கும் இருந்த உறவு, முரண்பாடுகள் என அனைத்து விஷயங்களையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு, ஓமந்தூரார், அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் குறித்த பல […]

Read more

இதழாளர் பாரதி

இதழாளர் பாரதி,பா.இறையரசன், யாழிசைப் பதிப்பகம், பக்.326, விலை ரூ.300. பாரதியை பலரும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த நிலையில் இந்த நூலில் ஐந்து தலைப்புகளில் பாரதியை பத்திரிகையாளராக முன்னிலைப்படுத்தி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். பாரதியாரின் இதழியல் நடை எனும் கட்டுரையில், பாரதி கூற்றாக, கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை, அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது என்று குறிப்பிட்டு […]

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன்,மேன்மை வெளியீடு, பக்.160, விலை ரூ.140. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பார்வையுடன் நம்நாட்டிலும், உலக அளவிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்கிற பெயரில் மக்களை வெளியேற்றுவது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, பெட்ரோல் விலையை அதிகப்படுத்திக் கொண்டே போவது, நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல […]

Read more

மாடர்ன் தியேட்டர்ஸ்,

மாடர்ன் தியேட்டர்ஸ், ரா.வேங்கடசாமி, விஜயா பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.120. தமிழ்த் திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த 118 திரைப்படங்கள் குறித்தும், அதன் நிறுவனர், இயக்குநர் டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள உதவும் நூல். எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான ‘வீரவாள்‘ என்ற திரைப்படத்தின் பெயர் ‘சர்வாதிகாரி‘ என மாற்றப்பட்டது எப்படி? ‘மந்திரிகுமாரி‘, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்‘ படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில் நடிக்காதது ஏன்? என்பதற்கான காரணங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, […]

Read more

மனம் உதிரும் காலம்

மனம் உதிரும் காலம், கல்பனா ரத்தன், கல்பதரு பதிப்பகம், விலை 100ரூ. வித்தியாசமான கோணத்தில் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு கவிதையாய் முளைத்து மனதுக்குள் பதிந்து இன்னொன்றின் விதையாக மாறும். அப்படி கணங்களால் காலத்தை நகர்த்தி தான் கண்டவற்றையெல்லாம் கவிதையாக்கித் தந்திருப்பது நல்ல ரசனை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026797.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காற்றாய் வருபவள்

.காற்றாய் வருபவள், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், விலை 60ரூ. இருக்கு ஆனா இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஒளிந்திருக்கும் ஒரு மர்ம முடிச்சுத் தேடுதலில் பல திடுக் சம்பவங்களுக்கு நடுவே தன் சொந்தத்தின் சூட்சும உருவைக் கண்டறியும் காதல், சென்டிமென்ட் கலந்த பேய்க் கதை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026798.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தமிழாக்கம் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து அதன் இன்பங்களை அனுபவித்திட வேண்டுமானால், அதன் மெய்ம்மையை உணர்ந்து கொள்வது அவசியம். அதற்கான எளிய சூத்திரத்தை பல்வேறு குட்டிக் கதைகள் மூலம் சொல்லித் தருவதே ஜென் துறவிகள் சொன்ன பாடங்கள். ஆங்கிலத்தில் யோமே.எம்.குபோஸ் தொகுத்து எழுதிய அத்தகைய பாடங்களின் எளிமைத் தமிழாக்கம் இந்த நூல். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026624.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை பாகம் 3, சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், விலை 200ரூ. விவேகமும் வீரமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரின் உரைகளில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ஒன்று கலந்தே ஒலித்தது. அவற்றுக்கு எதிரொலியாகவே எழுந்தவை மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும். அஞ்ஞானம் என்ற இருளில் இருந்து மக்களை விழித்தெழச் செய்யும் வகையில் அமைந்த அவர்கள் இருவரின் கருத்துகளையும் தேடித் தொகுத்துத் தரப்பட்டிருக்கும் அற்புதமான நூல் இது. பாரதியார் தமது கட்டுரைகள் பலவற்றிலும் சுவாமி விவேகானந்தர் குறித்து சொன்னவற்றைத் தொகுத்திருப்பதோடு, இருவர் […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 70ரூ. அறிவியல் பாடப்புத்தகங்களில் பெயர்களை மட்டுமே படித்திருக்கும் அறிவியல் அறிஞர்கள் பன்னிருவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டிருப்பது அருமை. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் வளர இந்நூல் நிச்சயம் உதவும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022170.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 14/3/2018.

Read more

முத்தன் பள்ளம்

முத்தன் பள்ளம், அண்டனூர் சுரா, மேன்மை வெளியீடு, விலை 150ரூ. புதினப் படைப்பில் ஒரு புதுமையாய், மறந்துபோனதால் மறைந்து போயிருக்கும் ஒரு சின்னஞ் சிறு கிராமத்தை வெளிக்கொணரும் முயற்சியாக எழுதப்பட்டிருக்கும் நாவல். விளையாட்டுப் பூச்சி தேடிச்செல்லும் பயணமாய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் வித்தியாசமானது. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026694.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 5 6 8