அறியப்படாத கலாச்சாரப் புரட்சி

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்),  டாங்பிங் ஹான்,  தமிழில்: நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், பக்.264, விலை ரூ.210. 1966 ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகள் நீடித்த சீன கலாசாரப் புரட்சியில் பலர் கொல்லப்பட்டனர். சீன பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டன என்பன போன்ற விமர்சனங்கள் உலகெங்கும் கூறப்படுகின்றன. கலாசாரப் புரட்சியால் சீனாவின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1981 இல் அறிவித்தது. கலாசாரப் புரட்சியைத் தொடங்கி நடத்தியவரான மா […]

Read more

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு

சங்க இலக்கியங்களில் சமய நோக்கு, கு.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,பக்.496, விலை ரூ.150. சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டில் (மார்ச், 8-11) வெளியிடப்பட்ட நூல் இது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், மக்கள் வாழ்வியல், நெறிமுறைகள், தொழில், வாணிகம், கலை முதலியவற்றை எடுத்துரைக்கின்றன. என்றாலும், அவற்றினூடே இறைவன் பற்றியும், இறை இயல்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. பிறவா யாக்கைப் பெரியோன்; (சிலம்பு),கறைமிடற்று அண்ணல் (புறம்), ஆதிரை முதல்வன்(பரிபாடல்), மழுவோன் நெடியோன் தலைவனாக(மதுரைக் காஞ்சி), "மறைமுது முதல்வன் (சிலம்பு), பிறங்கு […]

Read more

வெற்றி வாகை

வெற்றி வாகை(உங்கள் தொடர் வெற்றியின் திறவுகோல்), பரமன் பச்சைமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 150ரூ. வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? அப்படி வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாகச் செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே என்று நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிற்கும் இந்நூல். நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

குட்டி ஆகாயம்

குட்டி ஆகாயம் (சிறார் இதழ்), நிழல்,காந்தி, வானம் அமைப்பு, விலை 40ரூ. குழந்தைகள் உருவாக்கிய புத்தகம். இது குழந்தைகளுக்கான சிறுகதை தொகுப்புப் புத்தகம். இந்த புத்தகத்தை உருவாக்கியது முழுக்க முழுக்க குழந்தைகளே. ஒருவர் ஒரு வரி சொல்ல, அடுத்தவர் அடுத்த வரி சொல்ல குட்டி குட்டி சிறுகதைகளை உருவாக்கி, அதற்கான ஓவியங்களையும் அழகாக தீட்டி, இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது இதன் சிறப்பு. நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

மறவாதிரு மனமே

மறவாதிரு மனமே, தி.நெ.வள்ளிநாயகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. நீதிபதி, கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் தி.நெ.வள்ளிநாயகம். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “கனிந்தால் தானே கனி? துணிந்தால் தானே வழி! இருந்தால் தானே உயிர்! விளைந்தால் தானே பயிர்! “சுடச்சுடச் சங்கு வெண்மை தரும் உண்மை! தொடத் தொடக் கல்லும் சிலையாகும் தன்மை” என்பன போன்ற சுவையான கவிதைகள். “நரம்பு ஓடிந்தால் வீணை பாடாது” “சூரியனை ஒரே விரல் மறைத்திடுமே! காரிருளை ஒரே அகல் குறைத்திடுமே” […]

Read more

கல்கியின் யுகப்புரட்சி

கல்கியின் யுகப்புரட்சி, வானதி பதிப்பகம், விலை 140ரூ. “கல்கி” பத்திரிகையை 1942-ம் ஆண்டில் கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தியும், அவர் நண்பர் டி.சதாசிவமும் தொடங்கினார்கள். அதற்குமுன், “ஆனந்த விகடன்” பத்திரிகையின் பொறுப்பாசிரியராக “கல்கி” பணியாற்றினார். அப்போது, ஆனந்த விகடனில் அவர் எழுதிய பல கட்டுரைகள் இதுவரை நூல் வடிவம் பெறாமல் இருந்தன. அவற்றை “யுகப்புரட்சி” என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் இப்போது புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. புன்சிரிப்புடன் வாசகர்களைப் படிக்கச் செய்வது கல்கியின் பாணி. அந்த பாணியை […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள்

விடுதலைப் போரில் தமிழ் முஸ்லிம்கள், அ.மா.சாமி, கலாம் பதிப்பகம், விலை 250ரூ. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. மொழி, இனம், நாடு, என்பதைத்தாண்டி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மொழிப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026805.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருக்குறள் கதைகள் 50

திருக்குறள் கதைகள் 50, லதா, அருண் பதிப்பகம், விலை 150ரூ. கடவுள் நம்பிக்கை, அறிவே பலம், நன்றி மறவாதே, விருந்தோம்பல், உழைப்பின் உயர்வு, நல்ல நட்பு, நீதி தவறாமை உள்ளிட்ட தெதாகுப்புகளைக் கொண்ட குழந்தைகளுக்கான நூல் இது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:.https://www.nhm.in/shop/1000000026700.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பு எஸ்.ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், இரண்டு பாகங்கள் 800ரூ. தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாசகர்களுக்குப் பரிந்துரைத்த 100 முக்கியமான சிறுகதைகளின் தொகுப்பு இது. நூறாண்டுகளைக் கடந்த தமிழ்ச் சிறுகதையின் உச்சங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிடமுடியாதுதான். ஆனாலும், புதுமைப்பித்தன் தொடங்கி சந்திரா வரைக்கும் தமிழ்ச் சிறுகதை கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதையின் காதலர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு அருமையான வழிகாட்டி. நன்றி: தி இந்து, […]

Read more
1 4 5 6 7 8