100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி பதிப்பகம், விலை 1000ரூ. எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த மகத்தான பணிகளுள் ஒன்று இந்தத் தொகுப்பு. தமிழின் தலைசிறந்த 100 சிறுகதைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது இது. அங்கிருந்து புதிதாகப் பல எழுத்தாளர்களைக் கண்டடைவதற்கான வாசலையும் திறந்துவிடுகிறது. நவீன இலக்கிய வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தி இந்து, 13/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பு எஸ்.ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், இரண்டு பாகங்கள் 800ரூ. தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் தனது வாசகர்களுக்குப் பரிந்துரைத்த 100 முக்கியமான சிறுகதைகளின் தொகுப்பு இது. நூறாண்டுகளைக் கடந்த தமிழ்ச் சிறுகதையின் உச்சங்களைப் பட்டியலுக்குள் அடக்கிவிடமுடியாதுதான். ஆனாலும், புதுமைப்பித்தன் தொடங்கி சந்திரா வரைக்கும் தமிழ்ச் சிறுகதை கடந்து வந்திருக்கும் பாதையைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுகதையின் காதலர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு அருமையான வழிகாட்டி. நன்றி: தி இந்து, […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ. எல்லாருக்கும் பிடித்த சிறுகதைகள் இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ‘அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற […]

Read more

100 சிறந்த சிறுகதைகள்

100 சிறந்த சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ. பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் வெளியான 100 சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, நூல் வடிவில் கொண்டு வந்துள்ளார். இந்தக் கதைகளைத் தேர்வு செய்தது பற்றியும், கதைகளின் சிறப்பு பற்யும் விளக்கி, ராமகிருஷ்ணன் எழுதியுள்ள 22 பக்க முன்னுரை நன்றாக உள்ளது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் உள்பட சில எழுத்தாளர்களின் 3 கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில எழுத்தாளர்களின் 2 சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் ராமகிருஷ்ணனின் 2 […]

Read more