மறவாதிரு மனமே
மறவாதிரு மனமே, தி.நெ.வள்ளிநாயகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.
நீதிபதி, கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர் தி.நெ.வள்ளிநாயகம். அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
“கனிந்தால் தானே கனி? துணிந்தால் தானே வழி! இருந்தால் தானே உயிர்! விளைந்தால் தானே பயிர்! “சுடச்சுடச் சங்கு வெண்மை தரும் உண்மை! தொடத் தொடக் கல்லும் சிலையாகும் தன்மை” என்பன போன்ற சுவையான கவிதைகள். “நரம்பு ஓடிந்தால் வீணை பாடாது” “சூரியனை ஒரே விரல் மறைத்திடுமே! காரிருளை ஒரே அகல் குறைத்திடுமே” என்பன போன்ற உவமைகள் புதுமையானவை.
இறைவனைப் பற்றி அவர் எழுதிய நீண்ட கவிதையில், “இறைவன் வருமுன் அழகு செய்ய வேண்டாமா? உறைய அவன் குடில் சுத்தமாக வேண்டாமா?” என்று உள்ளத் தூய்மை குறித்து அவர் உரைத்திடும் பாங்கு பாராட்டத்தக்கது.
நன்றி: தினத்தந்தி, 28/2/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026698.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818