காந்தி என்கிற காந்தப்புலம்

காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.138. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் […]

Read more

என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.   இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி […]

Read more

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி (1900 – 1930) முதல் பாகம்,  அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.270, விலை  ரூ.250. கடந்த நூற்றாண்டின் தொடக்கமான 1900- இல் இருந்து1930வரைகவிதை, சிறுகதை, நாவல்,நாடகம், ஊடகம்,கட்டுரை, பதிப்புத்துறை ஆகியவற்றில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களை, வளர்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது . பாரதியாரின் “தனிமையிரக்கம்’ 1904 – ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் வழிநடை உப்புமா பாட்டு, தனிப்பாசுரத் தொகை,வருண சிந்தாமணி, சங்கிரக இராமாயணம், அருணாசல புராணம் போன்ற கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. வ.வே.சு.ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்’ இக்காலகட்டத்தில் வெளிவந்த […]

Read more

எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980)

எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980), அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.352, விலை ரூ.350. 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்துறையில்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், இதழ்கள், திரைப்படங்கள்,கட்டுரை, இலக்கிய கருத்தரங்கம் ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளை, மாற்றங்களை இந்நூல் சிறப்பாகப் பதிவு செய்கிறது. கவிதைத்துறையில் புதுக்கவிதையின் வளர்ச்சி இக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கவிஞர்கள் ந.பிச்சமூர்த்தி,சி.மணி,தருமு சிவராம், னக்கூத்தன்,கலாப்ரியா,தமிழ்நாடன்,கங்கைகொண்டான்,மீரா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வேழவேந்தன்,ஷண்முகசுப்பையா, நா.காமராசன், சு.மா.சண்முகசுந்தரம், சி.சு.செல்லப்பா,தேவதேவன், பஞ்சு, ஆ.தனஞ்செயன், பாப்ரியா,வைரமுத்து,அபி, மு.மேத்தா, ஞானி உள்ளிட்ட பல கவிஞர்களின் பங்களிப்புகளை […]

Read more

திரு.வி.க.தமிழ் இதழியல் முன்னோடி

திரு.வி.க.தமிழ் இதழியல் முன்னோடி,  அ.பிச்சை, காந்தி நினைவு அருங்காட்சியகம்,  பக்.104, விலை ரூ.100 தமிழறிஞராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் அறியப்பட்ட திரு.வி.க.,ஒரு பத்திரிகையாளரும் கூட. 1917 முதல் இரண்டரை ஆண்டுகள் தேசபக்தன் இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு 1920 முதல் 1941 வரை நவசக்தி இதழாசிரியராகப் பணியாற்றினார். 23 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல்துறையில் பணியாற்றிய திரு.வி.க. இதழியல்துறையில் செய்த மாற்றங்கள் எவை? இதழ்களின் மூலம் மக்களுக்கு அவர் பரப்பிய கருத்துகள் எவை? என்பதை விரிவாகவும், தெளிவாகவும் இந்நூல் எடுத்து உரைக்கிறது. இவ்விரண்டு இதழ்களில் அரசியலைப் […]

Read more

காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.144, விலை ரூ.135. தினமணியில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும், அவரின் தியாக வாழ்கையைத் தெரிந்து கொள்ளவும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன. காந்தியுடன் இணைந்து செயல்பட்ட நேரு, பட்டேல், ராஜாஜி ஆகியோருக்கும் காந்திக்கும் இருந்த உறவு, முரண்பாடுகள் என அனைத்து விஷயங்களையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு, ஓமந்தூரார், அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் குறித்த பல […]

Read more