எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980)
எழுபதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1970-1980), அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.352, விலை ரூ.350.
1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் இலக்கியத்துறையில்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், இதழ்கள், திரைப்படங்கள்,கட்டுரை, இலக்கிய கருத்தரங்கம் ஆகியவற்றில் நிகழ்ந்த வளர்ச்சிகளை, மாற்றங்களை இந்நூல் சிறப்பாகப் பதிவு செய்கிறது.
கவிதைத்துறையில் புதுக்கவிதையின் வளர்ச்சி இக்காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கவிஞர்கள் ந.பிச்சமூர்த்தி,சி.மணி,தருமு சிவராம்,
னக்கூத்தன்,கலாப்ரியா,தமிழ்நாடன்,கங்கைகொண்டான்,மீரா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வேழவேந்தன்,ஷண்முகசுப்பையா, நா.காமராசன், சு.மா.சண்முகசுந்தரம், சி.சு.செல்லப்பா,தேவதேவன், பஞ்சு, ஆ.தனஞ்செயன், பாப்ரியா,வைரமுத்து,அபி, மு.மேத்தா, ஞானி உள்ளிட்ட பல கவிஞர்களின் பங்களிப்புகளை இந்நூல் விளக்குகிறது.
ஜெயகாந்தன், அகிலன் உட்பட பலர் எழுதிய சிறுகதைகளைப் பற்றிய தகவல்கள்,ஜி.நாகராஜனின் கண்டதும் கேட்டதும்'சிறுகதைத் தொகுப்பைப் பற்றிய அறிமுகம், சிறுகதை வளர்ச்சியில் இலக்கியச் சிந்தனை அமைப்பின் பங்கு ஆகியவை விவரிக்கப்படுகின்றன.
புயலிலே ஒரு தோணி, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், நாளை மற்றுமொரு நாளே, மரப்பசு, தந்திரபூமி, கடல்புறத்தில், தலைகீழ் விகிதங்கள், பிறகு, புனலும் மணலும், கீறல்கள், கோபல்ல கிராமம் உள்ளிட்ட பல நாவல்கள் இக்காலகட்டத்தின் தமிழ் நாவல் வளர்ச்சிக்கான அடையாளங்களாக காட்டப்படுகின்றன.
இக்காலகட்டத்தின் தமிழ்நாடகச் சூழல்,வெளிவந்த சிற்றிதழ்கள்,பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர் ஆகிய இயக்குநர்களின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்,பல்வேறு இலக்கிய கருத்தரங்குகள் பற்றிய தகவல்கள் என தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றிய சிறந்த பதிவாகஇந்நூல் திகழ்கிறது.
நன்றி: தினமணி, 15/3/2021.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818