பன்னிருதிருமுறை

பன்னிருதிருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஒன்பதாம் திருமுறையாகும். இதில் […]

Read more

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், ஆர்.இளைய பெருமாள், சகுந்தலை நிலையம், பக். 414, விலை 300ரூ. பன்னிரெண்டு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்றவை, 108 திவ்ய தேசங்கள். 4,000 திவ்ய பிரபந்தங்களால் இந்த வைணவ கோவில்கள் போற்றப்பட்டுள்ளன. இந்த நுாலில் சோழ நாட்டுத் திருப்பதிகள், 40; நடுநாட்டில் – 2, தொண்டை நாட்டில் – 22, வடநாட்டில் – 11, மலைநாட்டில் – 13, பாண்டி நாட்டில் – 18, திருநாட்டில் – 2 என்று பட்டியலிட்டு கோவில்கள் விளக்கப்பட்டுள்ளன. இதில், கோவில் என்று […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், பக். 1328, விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, […]

Read more

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), […]

Read more

108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்

108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்கள்,  இரா.இளையபெருமாள்,  சகுந்தலை நிலையம், பக்.440. விலை ரூ.300. மானிட சரீரத்தோடு போக முடியாத திருப்பாற் கடல், இப்பூவுலகில் இல்லாத திருப்பரமபாதம் ஆகிய இரு திவ்ய தேசங்கள் உட்பட, 108 திவ்யதேசங்களைப் பற்றிய விரிவான நூல் இது. சோழநாட்டுத் திருப்பதிகள், நடுநாட்டுத் திருப்பதிகள், தொண்டைநாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதிகள், மலைநாட்டுத் திருப்பதிகள், பாண்டிய நாட்டுத் திருப்பதிகள், திருநாட்டுத் திருப்பதிகள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டு, இந்த திருப்பதிகள் – திவ்ய தேசங்கள்- அமைந்திருக்கும் இடம், அதற்குச் செல்லும் வழிகள், போக்குவரத்து வசதிகள், […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, பதிப்பாசிரியர் இராம லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் ஆகியோரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருவிசையப்பா, திருமூலர் திருமந்திரம் தொடங்கி பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் வரலாறு, அறுபத்து மூவர் வரலாறு என்று மொத்தம் 18,375 பாடல்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவர்களுக்கும் நல்விருந்து என்றே சொல்ல வேண்டும். உரையையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னம் பெருவிருந்தாக அமைந்திருக்கும். தமிழுக்கு வைசம் செய்துள்ள அருந்தொண்டின் தொகுப்பே இந்நூல். […]

Read more

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள், இரா. இளையபெருமாள், சகுந்தலை நிலையம், விலை 300ரூ. தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான வைணவத் தலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த 108 தலங்கள் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொரு கோவிலும் எந்த இடத்தில் அமைந்துள்ளது, எந்த வழியாகப் போகலாம் என்ற விவரங்களுடன், அந்த கோவிலின் சிறப்புகள் பற்றி தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதியுள்ளார் இரா. இளையபெருமாள். கோவில் மூலவர்கள் படங்கள், ஆர்ட் காகிதத்தில் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சிறந்த கட்டமைப்புடன் உயரிய பதிப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல். […]

Read more

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்)

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்), உரையாசிரியர்: முனைவர் பழ.முத்தப்பன, சகுந்தலை நிலையம், பக்.688, விலை ரூ.1200. வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லாக் கோயில்களுக்குமே அந்தக் கோயில்களைப் பற்றிய தலபுராணம் எழுதப்பட்டிருக்கும். அவ்வாறு தலபுராணம் பாடியவர்களுள் பரஞ்சோதி முனிவரும், பெரும்பற்றப்புலியூர் நம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள். மதுரை மாநகரில் சிவபெருமான் தம் பக்தர்களின் பொருட்டு நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைச் செய்யுள் வடிவில் பரஞ்சோதியார் தொகுத்தளித்ததே திருவிளையாடற் புராணமாயிற்று. இப்பெயரில் இரு நூல்கள் உள்ளன. ஒன்று பரஞ்சோதியார் பாடியது, மற்றொன்று பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியது. பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய […]

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ. குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் அறிமுக நூல். பெருவெடிப்பு நிகழ்வில் இருந்து பிரபஞ்சம் உருவாகி, கோள்களும், உயிரினங்களும் வந்த வரலாற்றை குழந்தைகளுக்காக படக்கதைபோல வண்ணப்படங்களுடன் எளிமையாக உருவாக்கி வழங்கி உள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.   —- நவக்கிரக தோஷ நிவர்த்திக்காக சித்தர்கள் அருளிய நெறிமுறைகள், சகுந்தலை நிலையம், சென்னை, விலை 35ரூ. துன்பம் தருகிற கிரகங்களை வேதங்களில் ரிஷிகள் உபதேசித்த நெறிமுறை வணங்கி வழிபட்டால் […]

Read more