கந்தபுராணம்

கந்தபுராணம், மூலமும் உரையும், முனைவர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், பக். 1648, விலை 1500ரூ. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகன் தலம் குமரக் கோட்டம். அந்தக் குமரக் கோட்டத்ததில் அர்ச்சகராக விளங்கிய காளத்தியப்ப சிவாச்சாரியரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் படைத்த நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களில், 135 படலங்களை அமைத்து, 10 ஆயிரத்து, 345 பாடல்களை பாடியுள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியார். […]

Read more

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), […]

Read more

குறுந்தொகை

தமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல் குறுந்தொகை, மூலமும் உரையும், உ.வே.சா. நூல் நிலையம், பக். 800, விலை 500ரூ. சங்க இலக்கியங்களிலே அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட நூல் என்ற பெருமையைப் பெற்ற நூலான குறுந்தொகை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா., அவர்களால், 1937ல், பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலை, 82வது வயதில் பதிப்பிக்கும் உ.வே.சா., அவர்கள், 100க்கும் அதிகமான பக்கங்களில் நூலாராய்ச்சியை கொடுக்கிறார். அதில், ஏட்டுப் பிரதிகள் பலவற்றையும் ஒப்பிட்டு, பாட வேறுபாடுகளை குறித்துக் கொண்டது மட்டுமன்றி, பிற இலக்கண, இலக்கிய உரைகளில் காணலாகும் மேற்கோள் பாடல்களையும் […]

Read more