குறுந்தொகை

குறுந்தொகை, இரா.பிரபாகரன், காவ்யா, பக். 667, விலை 700ரூ. தமிழ் இலக்கியங்களை வாஷிங்டன் வட்டார மக்கள் படிக்கும் வகையில் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூடம் என்ற அமைப்பை, 2003ல் உருவாக்கி அவர்களுக்கு புறநானுாறு மற்றும் சங்க இலக்கியங்களை போதித்துத் தமிழ்ப் பணியாற்றி வரும் முனைவர் இர.பிரபாகரன் நம் இலக்கியப் பரப்புரை முயற்சியில் மகுடமாகப் படைக்கப்பட்டது தான் இந்நுால். மேலும், 402 பாடல்களைக் கொண்ட குறுந்தொகைக்கு உரை எழுதிய சவுரிப்பெருமாள் அரங்கனார், உ.வே.சாமிநாதய்யர் வரிசையில் இவரது உரை, 10வது இடம் பெறுகிறது. இறையனார் பாடிய, ‘கொங்கு தேர் […]

Read more

குறுந்தொகை

. குறுந்தொகை, முனைவர் இர.பிரபாகரன், காவ்யா, விலை 700ரூ. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கிய நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. குறுகிய பாடல்களைக் கொண்டதால் இது குறுந்தொகை எனப்பட்டது. இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் கற்பனை வளமும், கவிதை நயமும் நிறைந்த காதல் ஓவியங்கள். குறுந்தகைப் பாடல்கள் காதல் வாழ்க்கையின் பல்வேறு கூறுபாடுகளையும், காதலர்களின் உள்ளத்தையும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறும் சுவையான பாடல்கள். அத்தகைய குறுந்தொகை பாடலுக்கு முனைவர் இர.பிரபாகரன் (மேரிலாந்து, அமெரிக்கா) அழகிய […]

Read more

குறுந்தொகை

தமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல் குறுந்தொகை, மூலமும் உரையும், உ.வே.சா. நூல் நிலையம், பக். 800, விலை 500ரூ. சங்க இலக்கியங்களிலே அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட நூல் என்ற பெருமையைப் பெற்ற நூலான குறுந்தொகை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா., அவர்களால், 1937ல், பதிப்பிக்கப் பெற்றது. இந்நூலை, 82வது வயதில் பதிப்பிக்கும் உ.வே.சா., அவர்கள், 100க்கும் அதிகமான பக்கங்களில் நூலாராய்ச்சியை கொடுக்கிறார். அதில், ஏட்டுப் பிரதிகள் பலவற்றையும் ஒப்பிட்டு, பாட வேறுபாடுகளை குறித்துக் கொண்டது மட்டுமன்றி, பிற இலக்கண, இலக்கிய உரைகளில் காணலாகும் மேற்கோள் பாடல்களையும் […]

Read more

சோசலிச சமுதாய மேதைகள்

சோசலிச சமுதாய மேதைகள், அ,சா. குருசாமி, சுரா பதிப்பகம், 1620 ஜே பிளாக், அண்ணா நகர், சென்னை 40, விலை 90ரூ. சோசலிச தத்துவார்த்த மரபில் குறிப்பிடத்தக்க, மூவரான ஸன் யாட் சென், காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் நூல். இது தத்துவார்த்த நூல் இல்லை என்றாலும் தத்துவ அறிஞர்களின் வாழ்க்கை எளிய நடையில் விவரிக்கும் நூல் இது. நன்றி: இந்தியாடுடே, 13/3/2013.   —-   குறுந்தொகை, இலந்தையடிகள் வித்துவான் இராச. சிவ. சாம்பசிவவர்மா(1934-37), பதிப்பும் ஆய்வும்- இரா. […]

Read more