108 திவ்ய தேசங்கள்
108 திவ்ய தேசங்கள், இரா. இளையபெருமாள், சகுந்தலை நிலையம், விலை 300ரூ.
தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான வைணவத் தலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த 108 தலங்கள் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. ஒவ்வொரு கோவிலும் எந்த இடத்தில் அமைந்துள்ளது, எந்த வழியாகப் போகலாம் என்ற விவரங்களுடன், அந்த கோவிலின் சிறப்புகள் பற்றி தெளிந்த நீரோடை போன்ற நடையில் எழுதியுள்ளார் இரா. இளையபெருமாள்.
கோவில் மூலவர்கள் படங்கள், ஆர்ட் காகிதத்தில் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சிறந்த கட்டமைப்புடன் உயரிய பதிப்பாக வெளிவந்துள்ளது இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 11/10/2017.