கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு, கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 225ரூ.

ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் ஈடு இணையற்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா எல்லாம் அவருக்கு தண்ணீர்பட்டபாடு. இடையிடையே நகைச்சுவையை கலந்து சிரிக்கவும் வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார். அவர் மறைவு, ஆன்மிகத்துறையில் ஈடு செய்ய முடியாத ஒரு சூனியத்தை ஏற்படுத்திவிட்டது.

பலரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் தமது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதுவே இந்தப் புத்தகம். தலைப்பைப் பார்த்தால், வாரியார் வரலாற்றை வேறு ஒருவர் எழுதியிருப்பதுபோல தோன்றலாம். அப்படியல்ல. வாரியாரே எழுதிய சுயசரிதையே இது. வாரியாரின் சொற்பொழிவை கேட்கும்போது எப்படி மெய்சிலிர்க்குமோ, அதுபோல இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. மொத்தத்தில் உணர்ச்சிமயமான சுயசரிதை

நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *