ஆலயம் வழிபாடு
ஆலயம் வழிபாடு, முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமாள், பக்.136, விலை 100ரூ.
சிவாலய வழிபாடு பற்றிய ஒன்பது கட்டுரைகள் நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன.
சிவாலய வழிபாட்டின் நுட்பங்கள் முதல் கட்டுரையில் தரப்பட்டுள்ளன. சிவலிங்கம் யோக நிஷ்டையையும், அதன் கீழுள்ள அஷ்டபந்தனம் மருந்து பிரகிருதி, மஹத், அகங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் எண் வகை பந்தங்களையும் குறிக்கிறது.
பலி பீடத்தில் நாம் காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சரியங்களை பலி கொடுத்து, உள்ளே செல்ல வேண்டும். அதன் பின், தரும வடிவில் உள்ள நந்தியை வணங்கி, மூலவரை தரிசிக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
ஆலய தத்துவ விளக்கம் பற்றிய கட்டுரை, ஆலயம் அமைக்கும் முறைகள், அவற்றின் காரணங்களைத் தருகின்றன. சிவாகமங்களில் கூறப்பட்டுள்ள ஆலய நகர அமைப்புகள் விரிவாக காட்டப்பட்டுள்ளன.
பெருஞ்சாந்தி என்னும் கும்பாபிஷேக முறைகளில் தத்துவங்கள், ஆலய நிர்மாணம், யாகசாலை பற்றிய செய்திகள் 26 வகை அபிஷேகங்கள் அதன் பயன்கள், 16 வகை சோடச உபசாரங்கள், ஆறு கால பூஜைகள் யாவும் காரண காரியத்துடன் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
நிவேதனம், தாம்பூலம், பண், ராகம், தாளம், வாத்யம், நிருத்தம் ஆகிய பூஜை முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
இந்த நுால் ஆலயங்கள் பற்றியும், அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் ஆகமங்கள் சொல்வதை அருமையாக அள்ளித் தரும் கோவில் கையேடு.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
– முனைவர் மா.கி.இரமணன்
நன்றி: தினமலர், 15/4/2018.