நல்ல தமிழில் எழுதுவோம்
நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இலக்கணம் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு சொக்கனின் இந்நூலைப் படித்தால் அடிப்படையான இலக்கணத்தை அறிந்து கொண்ட உணர்வைத் தருகிறது. நன்னூல், தொல்காப்பியம், இலக்கிய உதாரணங்களை மட்டும் சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று திரைப்படப்பாடல்களையும் பட்டிமன்ற நகைச்சுவையையும் உதாரணமாகக் காட்டுவது படிப்போரை எளிதில் விளங்க வைக்கும் உத்தி. புதிய தலைமுறையை நல்ல தமிழில் எழுதவைக்கும் முயற்சி இது. நன்றி: குமுதம், 4/1/2017.
Read more