நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ.

வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல், மிக இயல்பான முறையில் மிக இனிமையான புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

இலக்கணம் ஒரு மொழிக்கு ஆணி வேர் போல அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறது. வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே என சிந்தித்ததின் விளைவாக, செய்யும் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், வாக்கியங்கள், சினிமாப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றைக் கலந்து பொருத்தமான இடங்களில் நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்களையும், இலக்கிய உதாரணங்களையும் கையாண்டு இலக்கணம் கற்பிப்பது எளிதே என்கிறார் என். சொக்கன்.

அவரது புதிய முயற்சியை வரவேற்போம்.

நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *