வெற்றிச் சிம்மாசனம்

வெற்றிச் சிம்மாசனம், ப. ஜான் கணேஷ், தி ஒரிஜினல்பிரிண்டிங் பிரஸ், விலை 60ரூ. “நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை அர்த்தப்படும், யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை வசப்படும்” என்பார்கள். அதுபோல வாழ்க்கை வசப்படவும், வெற்றி நிசப்படவும் வழிகாட்டிடும் புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- கார்ல் மார்க்ஸ், வெ. சாமிநாத சர்மா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், மார்க்சியத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தமிழக மக்கள் அறிந்து […]

Read more

அவள் பிரிவு

அவள் பிரிவு, வெ.சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.100. வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு.சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். “ஒளி விளக்கு’ என்ற தலைப்பிடப்பட்டு தொடங்கும் கடிதம் “சங்கற்பம்’ என்ற தலைப்புடன் முடிகிறது. “என் மனைவி இறந்துவிட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவாளென்றுமே என் […]

Read more

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, வெ.சாமிநாத சர்மா,  இலக்கியச் சோலை, பக்.80, விலை ரூ.60 சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய, ஐரோப்பிய சக்திகளால் தொடங்கி வைக்கப்பட்டது பாலஸ்தீனப் பிரச்னை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில், உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து குடியமரச் செய்தார்கள். குடியேறிய யூதர்கள் சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கினர். அவர்களின் உரிமைகளைப் பறித்தனர். இழந்த உரிமைகளையும் நிலங்களையும் பெறுவதற்காக பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னையை 75 ஆண்டுகளுக்கு முன்பே நூலாசிரியர் வெ.சாமிநாத […]

Read more