அவள் பிரிவு
அவள் பிரிவு, வெ.சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.100. வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு.சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். “ஒளி விளக்கு’ என்ற தலைப்பிடப்பட்டு தொடங்கும் கடிதம் “சங்கற்பம்’ என்ற தலைப்புடன் முடிகிறது. “என் மனைவி இறந்துவிட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவாளென்றுமே என் […]
Read more