அப்துல்கலாம் ஒரு சகாப்தம்,
அப்துல்கலாம் ஒரு சகாப்தம், ம. வசந்த், மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ.
தனி மனித ஒழுக்கம், பெரியோர்களை மதிக்கும் பண்பு, கடமை உணர்ந்து செயல்படுதல், எப்படிப்பட்ட உச்ச நிலைக்குச் சென்றபோதும் பணிவையே தன் துணையாகக் கொண்டவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவரைப் பற்றிய புகழ்ப்பாக்களைக் கவிதை வடிவில் ஆக்கியுள்ளார் ம. வசந்த்.
நன்றி: தினத்தந்தி, 24/8/2016.
—-
நல்லகாலம் பிறக்குது, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ.
ஊரில் அக்கிரமங்கள் செய்யும் மூன்று அயோக்கியர்களை, கதாநாயகன் கிறிஸ்தவ குருமார் வேடத்தில் வந்து பழி வாங்குவதுதான் கதை. கதாசிரியரும், பத்திரகையாளருமான எஸ். விஜயராஜ், வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த நடையில் நாவலை அருமையாக எழுதியுள்ளார். சுருக்கமாகச் சொல்வதென்றால், திரைப்படமாகத் தயாரிப்பதற்கு ஏற்ற கதை.
நன்றி: தினத்தந்தி, 24/8/2016.