கிருமி

கிருமி, சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.350 பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயனின் மூன்றாம் சிறுகதைத் தொகுப்பு இது. தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளும் 2020-ன் பெரும் பகுதியை விழுங்கிய கரோனா ஊரடங்கின்போது எழுதப்பட்டவை. பெருந்தொற்றுக் காலத்தின் அச்சமும் அவநம்பிக்கையும் வீட்டில் அடைந்துகிடக்கும் மனித மனங்களில் உருவாகும் வெறுமையும் பெருந்தொற்று இல்லாத காலங்களிலும் தவிர்க்க முடியாத உணர்வுகளாக இருப்பதைப் பிரதிபலிக்கும் கதைகள் என்று இவற்றை வரையறுக்கலாம். பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகக் காமம் கலந்தோடுகிறது. ‘ஜலபிரவேசம்’ உள்ளிட்ட ஒருசில கதைகளில் காமம் குறித்த […]

Read more

96 தனிப்பெருங்காதல்

96 தனிப்பெருங்காதல், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை “ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதன் செல்வாக்குக்குக் காரணம்…”விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் – 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன். ராம்களும் ஜானுக்களும் இங்கே இருப்பதால் தான் இப்படம் பெருவெற்றி. அல்லது ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதன் செல்வாக்குக்குக் காரணம். […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், பக்.168, விலை ரூ.170, பிரம்மச்சரியம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. காந்தி தனது பிரம்மச்சரியத்தைப் பரிசோதிப்பதற்காக இரவில் தூங்கும்போது பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார் என்பதன் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் பேத்தி முறையுள்ள மநு என்கிற இளம் பெண். காந்தி தனது பிரம்மச்சரியப் பரிசோதனையை அவரை வைத்துத் தொடர்ந்தபோது, காந்தியின் ஆசிரமத்தில் இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. காந்தியின் […]

Read more