தேவார யாப்பியல்

தேவார யாப்பியல், அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.576, விலை ரூ.550. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல்களில் இசைப் பாடல்களே அதிகம். இவை பண் முறையில் பிரித்துப் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் யாப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை செய்யுளுக்கு உறுப்பாக அமைகின்றன. இவற்றில் தொடை என்பது ஒலிப்பு முறையால் செய்யுளுக்கு இனிமை தருகின்ற உறுப்பாகும். தொடைகளுள் எதுகை, மோனை ஆகிய இரண்டுமே சிறப்பானவை. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் இதன் சிறப்பை (செய்யுள் 94) எடுத்துரைக்கிறார். அவ்வகையில், தேவாரப் பாடல்களில் […]

Read more