நபித்தோழர்களின் சிறப்புகள்
நபித்தோழர்களின் சிறப்புகள் (முதல் பாகம்), ஜுபைர் பப்ளிஷர்ஸ், விலை 170ரூ.
நபித்தோழர்களின் சிறப்புகள் குறித்து அரபி மொழியில் அஷ்ஷைகு முஸ்தபா அல்அதவி எழுதிய நூல் சிறப்புக்குரியது. அதைத் தமிழில் எம். அப்துல் ரஹ்மான் பாஜில் பாகவி அழகுற மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலில் கலீபாக்கள் அபூபக்கர் சித்தீக், உமர், உஸ்மான், அலி மற்றும் தல்ஹபா, ஜுபைர், அபூ உபைதா, அப்துல் ரஹ்மான் பின் அவ்ப் போன்ற நபித் தோழர்களின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.
—-
என்னோடு வந்துவிடு, ஸ்ம்ரித்திராம், சிவாலயம், விலை 100ரூ.
19 சிறுகதைகள் கொண்ட நூல். ஒரு பக்கக் கதையும் உண்டு. 30 பக்கக் கதையும் உண்டு. எல்லாக் கதைகளுமே படித்து ரசிக்கக்கூடியவை.
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.