இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்
இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா.தேவதாஸ், எதிர் வெளியீடு, விலை 320ரூ.
சல்மான் ருஷ்தீக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தீர்க்கமான நாவல்களுக்காக மேலான கவனம் பெற்றிருப்பவர். அவரது இந்த புத்தகம் அதிக நுட்பம் நிரம்பியது. அணுக்கமான வாசிப்பு இருந்தால் இதன் மைய இழைகளை சுலபமாக தொட்டுவிடலாம்.
அவரது உரைநடை குறித்தும் அதன் செதுக்கிய தன்மை குறித்தும் இலக்கிய உலகில் மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறார்கள். பெரிதாக உரையாடல்கள் ஏதும் இல்லை. படிக்கும்போதே சில குறிப்புகள் கிடைக்கின்றன. சில ஒளித்து வைக்க்ப்பட்டு இருக்கின்றன என்பதையும் அறிவோம். அப்புறம் நாமாக புரிந்து கொள்ள வேண்டிய இடங்களும் இருக்கின்றன.
நாட்டுப்புற இலக்கியங்கள், தன் வரலாற்றுக் குறிப்பு, இரட்டைக் கோபுர தகர்ப்பு என நனவோடையின் எல்லா தெறிப்புகளும் உண்டு. மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸின் பணி இதில் எளிதானதல்ல. ஒவ்வொரு வரியையும் அவர் மொழியாக்கம் செய்ய பாடுபட்டிருக்கும் உழைப்பு கண்கூடாகத் தெரிகிறது.
இதெல்லாம் தேவதாஸுக்கு மகத்தான காரியம் என்ற கணக்கில் சேர்கிறது.
நன்றி: குங்குமம், 24/3/2017.