புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை
புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, மானா பாஸ்கரன், சாக்பீஸ் வெளியீடு.
எளிமையின் ருசி
வாழ்க்கையை ஆழ்ந்து ரசிக்கும் மனதின் பார்வையில் எந்த விஷயமும் சுவை மிக்கதாக அமைந்துவிடும். பால்யகால நினைவுகள், அன்றாடக் குழப்பங்கள் எனப் பல விஷயங்களை இலகுவான மொழியில் பேசும் மானா பாஸ்கரனின் இப்புத்தகம்,
அமைதியான நீரோட்டத்தின் குளிர்ச்சியை உணர்த்தும் சுவையான படைப்பு. ‘பசி வந்தாலும் பறக்காத பத்து’ எனும் ஆளுமைகளின் பட்டியலில் புத்தர், அம்பேத்கர், பெரியார் தொடங்கி வடிவேலு வரை இடமளிக்கிறார் மானா. சின்னக்குத்தூசியின் அசாத்தியமான பெருந்தன்மை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் போராட்ட வாழ்க்கை, சிவாஜி, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற கலைஞர்களின் படைப்பாற்றல் என்று பல விஷயங்கள் அடங்கிய புத்தகம்.
தலைப்புக் கட்டுரையில் ஆசிரியரின் மொழி வேறொரு தளத்தை அடைவது புத்தகத்தின் தனிச் சிறப்பு.
– சந்தனார்
நன்றி: தமிழ் இந்து, 20/4/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818