அறியப்படாத தமிழ்மொழி
அறியப்படாத தமிழ்மொழி, கண்ணபிரான் இரவிசங்கர் தடாகம் வெளியீடு, விலை: ரூ.250

கல்தோன்றி மண்தோன்றாச் சமூகமா தமிழினம் என்பதில் தொடங்கி இலக்கண அரசியல், நாட்டுப்புறத் தமிழ் என்று விரிகிறது இந்நூல். திருக்குறளில் முரண்பாடுகளா, அணுவைத் துளைத்ததை அவ்வை கண்டுபிடித்துவிட்டாளா, மாயோனும் சேயோனும் யார், எது முதல் திணை, தமிழை மறைத்தது எப்படி என்று விறுவிறுப்பான மொழியில் விவரிக்கிறார்.
சித்திரையா – தையா எது புத்தாண்டு, திராவிடமா – தமிழா, தொல்காப்பியத்தில் சாதி உண்டா, ஜாதிக்கும் சாதிக்கும் வேறுபாடு என்ன போன்ற விளக்கங்கள் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கின்றன. தமிழ் குறித்துப் பேசுவதற்கு ஆய்வு விளக்கங்களைத் துணைக்கு அழைக்கும் அதேவேளையில் மீம் போன்ற சமகால சமூக வலைதள உரையாடல் மொழியையும் கையாண்டிருக்கிறார்.
நன்றி: தமிழ் இந்து, 18/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026754.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818