ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம்
ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம், எஸ்.ஜி.ஜெயராமன், பக்.196, விலை ரூ.195.
படைப்பு ஆற்றல்களாக விளங்கும் குண்டலினி, ஜீவசக்தி, பிராண சக்தி ஆகிய மூன்றும் ஒன்று கூடி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதார ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்த மூன்று ஆற்றல்களும் மனித உடலில் முறையாகச் செயற்படும்போது மனிதர்களை நோய்கள் நெருங்குவதில்லை.
ஆனால் இந்த ஆற்றல்கள் மனிதர்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால் நோய் வாய்ப்படுவார்கள். அப்போது பிரபஞ்சத்தில் உள்ள உயிராற்றல்களை மனித உடல் தன்னுள் ஈர்த்துக் கொண்டால், நோய்களிலிருந்து விடுபட முடியும். இதற்கான வழிகளை புத்தரின் கடைசிப் போதனைகள் குறிப்பிடுகின்றன. ஜப்பான் நாட்டின் மிகோவோமி உசூயி என்பவர் புத்தரின் தொடர்ச்சியாக ரெய்கி எனும் மருத்துவமுறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
இந்நூல் ரெய்கி மருத்துவத்தின் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறுகிறது. ரெய்கி முறையில் பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆழ்மனதின் ஆற்றலைப் பற்றி விரிவாகக்கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி, 16/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818