வேணாடும் தமிழ்மரபும்
வேணாடும் தமிழ்மரபும், வ.ஆன்றனி ஜோசப், பக்.369, விலை ரூ.390.
உருவங்கள் ஊடக ஆய்வு மையம், புலவன்விளை, கல்லாங்குழி அஞ்சல், குமரி நமாவட்டம். நன்னூல் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு நாடுகளில் ஒரு நாடாக வேணாடு உள்ளது. எனினும் சங்க காலத்தில் வேணாடு என்ற ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
வேணாடு எங்கு அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல்துறை கல்வெட்டுத் தொகுப்புகளின்படி, தற்போதைய கேரள மாநிலத்தின் கோட்டயம், திருவல்லா, சங்கனாசேரி, ஏற்றமானூர் முதலிய பகுதிகள் வேணாட்டின் பகுதிகளாக இருந்திருக்கின்றன. கன்னியாகுமரி, மங்கலம் முதல் மணக்குடி, அழகியபாண்டியபுரம் வரை உள்ள பகுதிகள் வேணாட்டைச் சேர்ந்தவையாக இருந்திருக்கின்றன.
வேணாட்டின் பெயர் கி.பி.1728 -ஆம் ஆண்டுக்குப் பிறகு திருவிதாங்கோடு (திருவிதாங்கூர்) என்று மாறியது என்று கூறும் நூலாசிரியர், திருவிதாங்கூர் நாட்டின் அரசியல், பொருளாதார சமூக நிலைகளை விரிவாக விளக்கியிருக்கிறார்.
திருவிதாங்கூரில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன; சாதி ஒடுக்குமுறைகள் அதிகமாக இருந்தன; இத்தகைய நிலையை மாற்றுவதற்கு பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன; கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி அளிப்பதற்கு ஆரம்பக் கல்வி நிலையங்களாக, பல்கலைக்கழகங்களாக களரிகள் இருந்திருக்கின்றன; கிறிஸ்தவ மிசனரிகள் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கின்றன;
வேணாடு ஒரு போராட்டக் களமாகவே இருந்திருக்கிறது என்பன போன்ற பல வரலாற்றுத்தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.”
நன்றி: தினமணி, 30/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818