மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்
மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர், ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.160.
“பிறருடைய துன்பத்தை, வேதனையைக் கண்டு “ஐயோ” என்று நினைத்து அவனுக்காக இரங்கி, அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய எவன் துடிக்கிறானோ, அவனே உண்மையான வைணவன்” என்ற வைணவக் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தவர் இராமானுஜர்.
மனிதர்களில் ஏற்ற தாழ்வுகள் இல்லை. இறைவனின் முன்பு எல்லாரும் சமம் என்ற அடிப்படையில் இராமானுஜர் வாழ்ந்ததை, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களின் துணைகொண்டு நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இராமானுஜரின் இளம்பருவம், அவர் துறவியானது, அவர் தனது கருத்துகளுக்காக பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டது, யாதவப் பிரகாசர் என்பவர் இராமானுஜரின் கருத்துகளுக்காக அவரைக் கொல்ல நினைத்தது, திப்பு சுல்தான் அரசவைக்கு இராமானுஜர் சென்றுவரும்போது அவரை வழிமறித்த கள்வர்களிடம் இருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவரைக் காப்பாற்றியது, அந்த மக்கள் கோயிலுக்குள் வர மறுத்ததை ஏற்றுக் கொள்ளாத இராமானுஜர், கோயில் அனைவருக்கும் சொந்தம்; அதில் உயர்வு தாழ்வு இல்லை என்று பிரசங்கம் நிகழ்த்தியது என இராமானுஜரின் அரிய வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 16/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818