வைணவ வாழ்க்கை தத்துவங்கள்
வைணவ வாழ்க்கை தத்துவங்கள், ந.இரா.சீனிவாச ராகவன், வானதி பதிப்பகம், விலைரூ.200.
ஆன்மிகத்தில் ஆழ்ந்த அறிவு பெற்ற ஆன்மிக அனுபவத்தின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.
‘ஷேமநிதி’ என்ற தலைப்பிலான கட்டுரையில், பாவ மற்றும் புண்ணியங்களின் கணக்குகளைக் குடும்ப உறவுகளிடையே ஒருங்கிணைத்து, அதன் மூலம் வரும் லாப நஷ்டக் கணக்குகளை அருமையாக குறிப்பிடுகிறார். புண்ணிய பலத்தால் சந்ததியினருக்கு எவ்வாறு இறையருளைப் பெற முடியும் என்றுரைக்கிறார்.
‘ஸீதாராமன் திருக்கல்யாணம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில், தினமும் ஸீதாராமன் திருக்கல்யாணம், காசியில், 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிரத்தையுடன் நடத்துவதை விளக்குகிறார்.
திருமலை ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும், திவ்யதேசப் பெருமாளுக்கும் உள்ள, 12 வித்தியாசங்களை சிறப்பாக விளக்கியுள்ளார். பாகவதம் முதற்கொண்டு அறம், விதியின் வலிமை, தத்துவம், அன்பு, கடமை என்ற நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்.
நன்றி: தினமலர்,20/12/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030840_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818