சுக்கா… மிளகா… சமூக நீதி?
சுக்கா… மிளகா… சமூக நீதி? , ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு, மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512. விலைரூ.500,
இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் சென்னை மாகாணத்தில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இடப்பங்கீட்டு முறை அறிமுகமானது; அதன் பின்னர் சுதந்திரத்துக்குப் பிறகு, கடந்த 1994 வரை 47 ஆண்டுகள் இடப்பங்கீட்டு முறை நடைமுறைப்படுத்தாதது குறித்தெல்லாம் நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.
கல்வி-வேலை வாய்ப்புகளுக்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட காகா கலேல்கர், பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்ட வரலாறு-கமிஷன் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் வைக்காமலும், நடைமுறைப்படுத்தாமலும் இருந்ததைக் கண்டித்து பா.ம.க. நடத்திய போராட்டங்கள், வி.பி.சிங் பிரதமரானதும் மண்டல் அறிக்கையை வெளியிட்டது;27 % இட ஒதுக்கீடு அறிவிப்பு- அதனால் அவர் தனது ஆட்சியை இழந்தது; நரசிம்மராவ் பிரதமரானதும் மண்டல் சிபாரிசின் படி 27 % இட ஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில்,ஆந்திர மாநில ராஜசேகர ஆச்சாரிக்கு பணி வழங்கித் தொடங்கி வைத்தது என பல்வேறு ஆதாரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக தமிழகத்தில் , எம்.ஜி.ஆர் , கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவர் வைத்த கோரிக்கைகள், நடத்திய பல்வேறு வகையான போராட்டங்களின் விளைவாக 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைத்தது, 9-ஆவது அட்டவணையில் அதைச் சேர்க்க வகை செய்தது, 107 சமுதாயங்களை உள்ளடக்கிய வன்னியர் பிரிவினருக்கு 20 சதவிகிதம் ஒதுக்கீடு பெற்று தந்தது என இடஒதுக்கீடு தொடர்பான அவருடைய நடவடிக்கைகளின் பயன்களைப் பற்றி இந்நூல் மூலம் அறிய முடிகிறது. சிறந்த ஆவணம்.
நன்றி: தினமணி, 15/3/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031018_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818