விந்தை மிகு பூச்சியினம்
விந்தை மிகு பூச்சியினம், ரெ. வீரவேல், அனுதானா பப்ளிஷர்ஸ், பக்.384, விலை ரூ.900.
உலகம் முழுவதும் காணப்படும் பூச்சி இனங்களைப் பற்றிய விரிவான நூல். “கலைக்கதிர்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
“பூச்சிகளின் தோற்றம்’, “பூச்சிகளின் நெருங்கிய உறவினர்கள்’, “பாடும் வெட்டுக்கிளிகள்’, “பாயும் பாச்சான்கள்’, “தேனீக்களின் தேன் வாழ்க்கை’ என்பன உள்ளிட்ட 45 தலைப்புகளிலான கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பூச்சிகளில் எண்ணற்ற வகைகள்; அவற்றின் பலம், பகுத்தறிவு, நுண்ணறிவு, செயலாற்றும் திறன் போன்றவற்றைப்பற்றி அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆண் பூச்சிகளின் உதவி இல்லாமலேயே பெண் பூச்சிகள் வாழ முடியும். வலிமை உள்ள பூச்சிகள் மட்டுமே பூமியில் உயிர் வாழ முடியும்.
பூச்சிகளின் முக்கியத்துவம் தெரியாமல் நாம் அவற்றை அழிக்க நினைக்கிறோம். உண்மையில், பூச்சிகளால் நாம் பலவிதப் பயன்களை அடைந்து வருகிறோம்.
தேனீ வெளியிடும் பசை போன்ற பொருளை உபயோகித்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகளைக் குணப்படுத்துகின்றனர்; நுண்ணுயிர்களை அழிக்கின்றனர்.
பூச்சிகளிடையே பெரிய அளவு மூளை உடையவை எறும்புகள்தாம். வண்ணத்துப் பூச்சிகள் இமயமலையில் 18,000 அடி உயரத்திலும் காணப்படுகின்றன என்பன போன்ற பல அரிய வியப்பூட்டும் தகவல்களை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி,20/9/21/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818