நட்சத்திரப் பெண்

நட்சத்திரப் பெண் – விஞ்ஞான சிறுகதைகள், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நிஜமா, கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதை பேசி வடிவம் கொடுத்துள்ளார் ஆர்னிகா நாசர். இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும், அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்டுகின்றன. காலக் கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, முடிவிலும் நிஜத்தைப் போலவே சோகத்தை தருகிறார். ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறார். பூனையும், எலியுமான ‘டாம் அண்டு ஜெர்ரி’ கதை […]

Read more

கனவெனும் மாயசமவெளி

கனவெனும் மாயசமவெளி, ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180. ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு… கனவுக்குள் கிரைம்… த்ரில்லர்… கில்லர்… நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது. மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு […]

Read more

புல்லாங்குழல்

புல்லாங்குழல், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கைவண்ணத்துக்கு ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்… இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்ப கட்ட யதார்த்தம். ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது […]

Read more