தண்டவாளங்கள்

தண்டவாளங்கள், டாக்டர் பாலசாண்டில்யன், குவிகம் பதிப்பகம், விலைரூ.120 கலைமகள் மாத இதழ், இலக்கியப்பீடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்ததும், போட்டிகளில் பரிசுகள் பெற்ற 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளுக்கான இலக்கணங்களுடன் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகப்பார்வை, மனிதநேயம், விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குடும்ப சிக்கல்களை மையமிட்டு அதற்கான தீர்வாக சிறுகதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகு தேவதைகள் என்ற சிறுகதையில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்குமான உறவைச் சிறப்பாக வடித்துள்ளார் நுாலாசிரியர். குடும்பம் தொடர்பான சிக்கல்களை வித்தியாசமான கோணத்தில் அமைத்தும், அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது. நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த […]

Read more