எளிய மொழியில் உளவியல் ஆலோசனை
எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300.
வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது.
நூலாசிரியரின் 28 ஆண்டுகால உளவியல் சிந்தனை அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை நூல்கள் சொல்வதுபோல மனதில் ஒன்றை நினைத்தால் அதை அடைய முடியுமா? தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களைப் பார்ப்பவர்களின் மனதில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் எவை? குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை விட்டுவிட என்ன செய்ய வேண்டும்?
மறதியைத் தவிர்ப்பது எப்படி? காலமேலாண்மையைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை சொல்கிறது இந்நூல். நூலாசிரியரின் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் செறிவான கருத்துகள் வாசகர்களை ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
நன்றி: தினமணி, 25/2/219.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027981.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818