கர்ணன் – காலத்தை வென்றவன்

கர்ணன் – காலத்தை வென்றவன், மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த், தமிழில் – நாகலட்சுமி சண்முகம்;மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.862; விலை ரூ.899.

மகாராஷ்டிர அரசின் விருது, குஜராத் இலக்கிய அமைப்பின் விருது, ஞானபீடத்தின் மூர்த்திதேவி விருது உள்பட பல விருதுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம் இது. சூரிய பகவானுக்கும், குந்திக்கும் பிறந்த கர்ணனை குந்தி அசுவநதியில் போட்டுவிட, அதிரதன் என்னும் தேரோட்டி கர்ணனை அசுவநதியில் கண்டெடுத்து தனது மகனாக வளர்த்தார்.

பிறந்த கணம் தொட்டு பாரதப் போரில் அர்ஜுனனால் கொல்லப்படும் வரை கர்ணன் விதியின் பிடியில் எவ்வாறு அகப்பட்டிருந்தான் என்பதை இந்தநாவல் விரிவாக எடுத்துரைக்கிறது.வில்வித்தை, மல்யுத்தம், குதிரையேற்றம் உள்ளிட்டவற்றில் சத்திரியர்களை விட மிகத் தேர்ந்தவனாக இருப்பினும், சூத புத்திரன் என அவனது குலத்தை முன்னிறுத6்தி கர்ணன் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுகிறான்.

கர்ணனின் கையறுநிலையை துரியோதனன் தனக்குச் சாதகமாக பயன்படுத்தியது முதலே கர்ணனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது எனலாம். கர்ணன் என்பவன் யார், அவன் ஏன் அதர்மத்தின்பால் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவனது மனவோட்டம் என்ன? குந்தி, துரியோதனன், கர்ணனின் மனைவி விருசாலி, துரோணரின் மகன் அசுவத்தாமன், கிருஷ்ணன் ஆகியோருக்கும் கர்ணனுக்கும் இடையே நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த நாவல் புனையப்பட்டிருக்கிறது.

நன்றி: தினமணி, 23/3/2020.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030116_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *