கேட்பவரே

கேட்பவரே, லக்ஷ்மி மணிவண்ணன், படிகம், விலை 320ரூ.

வாழ்க்கையை விடவும் பெரிய வகைமாதிரியை உருவாக்குவதே கலையின் நோக்கம். தமிழ் கவிதையின் தரிசனங்களில் வெகு அரிதாகவே லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை காண முடிகிறது. அது அப்படித்தான்.

கலைஞனது சுயசரிதையில் எஞ்சிக் கிடக்கும் சுவாரஸ்யம்தான் என்ன? அவனது வாழ்க்கையா? ஒரு மனிதன், படைப்பாளனாகிற அந்தக் கணத்திலிருந்தே அவன் செல்லுகிற பாதை முன்கூட்டி நிச்சயக்கப்பட்டு விடுகிறது.

மணிவண்ணன் சூதாட்டப் பலகையில் சுற்றி வருகிற எண்களைப் பார்க்கிற அதி தீவிர கவனத்திலேயே வாழ்க்கையைப் பார்க்கிறார். பிரதி செய்யவே முடியாத அவரது மொழி ஆளுமை தன்னிகரற்றது. சில சமயம் வாழ்க்கையைப் புனரமைக்கிறார்.

பல காலம் தூக்கி எறிகிறார். சமயங்களில் ஏந்தி கொண்டாடுகிறார். அப்புறம் ஏங்கித் தவிக்கிறார். சில சமயங்களில் அவரது ஒரு சொற்றோடர், எரிமலைக் குழம்பில் கல் விழுந்தது மாதிரி கலந்துவிடுகிறது.

மனதில் ஏதாவது ஒரு ஒத்திசைவோ, அதிர்வோ, ஓவியமோ வந்து அமர்ந்துவிடுகிறது. தட தடவென புரட்சி சென்று விட முடியாத கவிதைகளில் பூரணத்துவம் மிளிர்கிறது. கவிதையின் உட்பொருளை அறியவும், புரியவும், அவரை தொடர்ந்து சென்றாலே போதுமானது. அதற்கான எல்லா வழித்தடங்களையும் அவரே விட்டுச் செல்கிறார். சமயங்களில் கடவுளிடம் பேசுவதுபோன்ற சாத்தியமும் காணக்கிடைக்கிறது.

நன்றி: குங்குமம், 2/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *