மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்.
மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்., பொம்மை சாரதி, கவிதா பப்ளிகேஷன், பக்.280, விலை ரூ.200.
எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய இதழாசிரியரான பொம்மை' சாரதி எழுதியிருக்கும் இந்நூலில், 1949 -இல் பேசும் படம் இதழுக்காக எம்.ஜி.ஆர். அளித்த முதல் பேட்டி இடம் பெற்றிருக்கிறது.
நடிகன் குரல்இதழில் பல்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள், ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் நேர்காணல், கல்லூரி மாணவி மீராவுக்கு எம்.ஜி.ஆர்.
அளித்த விரிவான பேட்டி கல்கண்டு இதழில் தமிழ்வாணன் எம்.ஜி.ஆர்.குறித்து எழுதிய கேள்வி – பதில்கள் எனப் பலவற்றையும் தொகுத்து, கேள்வி – பதில் மூலமாகவே எம்.ஜி.ஆரின் சிறப்பியல்புகளை விவரிக்கும் இந்நூல், ஒரு வித்தியாசமான முயற்சி. பல இடங்களில் எம்.ஜி.ஆரின் பதில்கள் கென்று இருக்கின்றன.
உதாரணமாக, உங்கள் மனைவி செளக்கியமாக இருக்கிறார்களா?என்ற கேள்விக்கு இல்லாவிட்டால் நான் செளக்கியமாக இருக்க முடியுமா?என்ற பதிலைக் குறிப்பிடலாம்.
என் படங்களில் புதுமுகங்கள் ஏன்?செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். வரலாற்று ஆய்வு, ஆன்மிகமும் எம்.ஜி.ஆரும் உள்ளிட்ட கட்டுரைகள் பலரும் அறியாத தகவல்களைத் தருகின்றன.
எம்.ஜி.ஆரைப் பற்றி பல நூல்கள் வெளிவந்த போதிலும், இதில் படிக்கத் திகட்டாத பல புதிய விஷயங்கள் இருப்பது நூலின் சிறப்பு.
நன்றி: தினமணி, 24/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818