ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஜெயகாந்தன், தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன், கா.எழில்முத்து, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.300.
தமிழ் சினிமா மாறியதும் மாறாததும்
எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது.
வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், பொருளியல் சூழ்நிலைகள், நட்சத்திரப் படாடோபங்களும்கூட. புராணம், தேசியம், திராவிடம் என சினிமா கடந்த கதை இதில் உண்டு. சந்திரபாபு போன்றவர்களுடன் கொண்ட அரிய நட்பின் கதைகளும் உண்டு. தமிழ் சினிமா உலகில் மாறியதும் மாறாததுமான அம்சங்களைத் தெரிந்துகொள்ள இந்நூலைப் படிக்கலாம்.
நன்றி: தமிழ் இந்து, 11/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000010676.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818