பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் (தீர்வுக்கான வழிமுறைகளும்), சி.எஸ்.தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.200, விலை ரூ.180.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று நூலின் தலைப்பு இருந்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்தே நூல் தொடங்குகிறது. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை,பாலியல் தொழிலில் சிறுமிகள் ஈடுபடுத்தப்படுவது, பாலியல் தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலை என நூல் விரிகிறது.
குடும்பத்தில் பெண்ணின் நிலை, இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து தருதல், வரதட்சணைக் கொடுமை, பெண்களை அடித்தல், கட்டாயத் திருமணம் உட்பட பெண்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதைப் பற்றியும் நூல் விவரிக்கிறது. வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு எவ்விதங்களில் எல்லாம் பாலியல் தொந்தரவுகள் வரக் கூடும், அவற்றைத் தவிர்க்க பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விஷயங்களையும் நூல் விளக்குகிறது.
தொலைக்காட்சித் தொடர்கள், இணைய தளங்கள், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் எவ்வாறு ஒட்டுமொத்த சமூகத்தின் நல்ல மனநிலையைக் கெடுக்கின்றன என்பதைத்தெளிவாகச் சொல்லும் இந்நூல், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? பெண்களுக்கு உள்ள சட்டப் பாதுகாப்புகள் எவை? என்பனவற்றையும் எடுத்துச் சொல்கிறது.
பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும். தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருப்பது அவசியம். அவர்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்த்தப்படும்போது, பெண்களுக்கான அமைப்புகளும், இயக்கங்களும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த பக்கமாயிருந்து உதவ வேண்டும் என்று நூலாசிரியர் பெண்கள் சந்திக்க நேர்கிற பிரச்னைகளுக்கான தீர்வாக முன் வைக்கும் கருத்துகளும் சிறப்பு.
நன்றி: தினமணி, 25/3/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000028019.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818