புதிய செலபஸ்
புதிய செலபஸ், கோ.வரதராஜன், தமிழ்ச்சுவடி, பக்.424, விலை ரூ.400.
தேசியப் பண்பாட்டை வடிவமைத்த ஆன்மிக அறிஞர்கள் முதல் தற்கால தூய்மை இந்தியா திட்டம் வரை-அவற்றைப் பற்றி மிக எளிமையாக, அதே நேரத்தில் அதன் சாரம் குறையாத வகையில் நூலாசிரியர் கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். பொதுவியல், கல்வியியல் மற்றும் தத்துவவியல், பொருளியல், விஞ்ஞானவியல் என நான்கு பகுதிகளாகப் பிரித்து, அதில் 81 கட்டுரைகளை இடம் பெறச் செய்துள்ளார்.
வாழ்வுக்கு வள்ளுவரையும், படிப்பறிவுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனையும், பண்பாட்டுக்கு சகோதரி நிவேதிதையையும், இலக்கியத்துக்கு பாரதி, கம்பரையும், அறிவியலுக்கு அப்துல் கலாமையும் என அனைத்து கட்டுரைகளிலும் கடந்தகால, நிகழ்காலத் தலைமைகளை மையப்படுத்தி விவரித்திருப்பது பாராட்டுக்குரியது.
கிராமங்களின் நிலை, அங்குள்ள நூலகங்களின் நிலை ஆகியவற்றை ஆசிரியர் எடுத்துரைக்கும் விதம் அதை நாம் மனதில் திரைப்படம் போல காட்சிப் படுத்தும் வகையில் உள்ளது. எடிசன் முதல் சமீபகால ஸ்டீபன்ஹாக்கின்ஸ் வரையிலான அறிவியலாளர்களை நூலாசிரியர் அறிமுகப்படுத்தி, அவர்களது போராட்ட வாழ்வை விவரித்திருப்பது சிறப்பு.பொது அறிவு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்பதால், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் இந்நூல் பயன்படும்.
நன்றி: தினமணி, 25/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818