சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு

சுபயோக சுப முகூர்த்தம் திருமணப் பொருத்த கைடு, எஸ்.அன்பழகன், அன்பு பப்ளிசிங் ஹவுஸ், பக்.384, விலை ரூ.250. திருமணப்பொருத்தம் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திருமணப்பொருத்தங்களான தசவித பொருத்தங்கள், தோஷ சாம்யம், ஜாதகப் பொருத்தம், திருமணத்திற்கு நாள் குறிப்பது போன்றவற்றை எளிய முறையில் ஜோதிடரல்லாதோரும் அறிந்துகொள்ள எழுதப்பட்ட அரிய நூல். ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைக் குறித்தும் அதில் நிற்கும் கிரகங்கள், ஏழாம் ஸ்தானத்தின் மதிப்பு, இந்த ஸ்தானத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை தெளிவு படுத்தியிருக்கும் ஆசிரியர், ஆயுள் ஸ்தானம் குறித்தும் […]

Read more

நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான்

நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான், எஸ். அன்பழகன், அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா, பக். 884, விலை 750ரூ. ஜோதிட சாஸ்திரத்தில் கோள்களின் முக்கியத்துவம், ஜாதகங்களைக் கணிக்கும் முறைகள், நவக்கோள்களின் காரகத்துவங்கள், ராசி மண்டலத்தில் அமைந்துள்ள ராசிகள், அவற்றின் அதிபதிகள், ராசிகளுக்கான நட்சத்திரங்கள், அவற்றின் பாதங்கள், லக்னத்தைக் கணிக்கும் விதம், நவாம்சம் மூலம் ஜாதகங்களின் பலன்களைத் துல்லியமாகக் கணித்தல் என பல விவரங்கள் இந்த நூலில் பயனுற அமைந்துள்ளன. ராசிகள், லக்னங்கள், பன்னிரண்டு பாவங்களுக்கான பொதுப் பலன்கள், அந்த […]

Read more