தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீட்டகம். திரைப்படங்களின் ஆதி சித்திரங்களைத் தொகுத்திருக்கும் நூல். இந்தியாவில் திரைப்படத்திற்கான முயற்சிகள் எவ்விதம் ஆரம்பித்தது, அதற்கான முயற்சிகள் பற்றி தெளிவாகவும் சுருக்கமாகவும், மிகையின்றியும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் திரைப்படம், நடராஜ முதலியாரின் ‘கீச்சுவதம்’, முதலில் தமிழ் பேசிய திரைப்படம் என விரிவாகவும் கட்டுரைகள் உள்ளன. ஒன்றை முற்றாக அறிந்து தெரிந்துகொள்வதற்கு முன், அதன் அடிப்படை தெரிதல் அவசிமானது. அரிதான சில போஸ்டர்கள், நாம் பார்த்தறியாத விளம்பரங்களின் கவனம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. லூமியர் சகோதரர்களின் திரைப்படக்காட்சி […]

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு – 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீடு, பக். 104, விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டதன் விளைவாக, தமிழ்த் திரைப்படங்களின் நூற்றாண்டு எந்த ஆண்டாக இருக்க முடியும் என்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. அந்தக் குறையை இந்நூல் தீர்த்து வைக்கிறது. 2018 ஆம் நூற்றாண்டுதான் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது இந்நூல். தமிழ்த் திரைப்படங்கள் குறித்த ஆய்விற்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more