ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும்

ஐம்பெருங்காப்பியங்களும் தமிழர் வாழ்வும், கி.நெடுஞ்செழியன், வளர்மதி பதிப்பகம், விலை 200ரூ. மயிலாடுதுறையில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், ‘தமிழ்மாமணி’ விருதும், ‘கரைகண்டம்’ என்ற புனைப்பெயரும் பெற்றவர். இவர் தமிழில் கரை காண முயற்சித்திருப்பது இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன், மதுரையில் தமிழ்க் கடைச்சங்கம் தோன்றிய காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்கள் பல. அவற்றில் ஐம்பெருங்காப்பியங்களும் உண்டு. அதில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி ஆகியவை சமணக் காப்பியங்கள் என்றும், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பௌத்த காப்பியங்கள் என்றும் கூறப்படுவதுண்டு. இக்காப்பியங்கள் அச்சமயக் கொள்கைகளைப் போதிப்பதில்லை. […]

Read more