தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீட்டகம்.

திரைப்படங்களின் ஆதி சித்திரங்களைத் தொகுத்திருக்கும் நூல். இந்தியாவில் திரைப்படத்திற்கான முயற்சிகள் எவ்விதம் ஆரம்பித்தது, அதற்கான முயற்சிகள் பற்றி தெளிவாகவும் சுருக்கமாகவும், மிகையின்றியும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் திரைப்படம், நடராஜ முதலியாரின் ‘கீச்சுவதம்’, முதலில் தமிழ் பேசிய திரைப்படம் என விரிவாகவும் கட்டுரைகள் உள்ளன. ஒன்றை முற்றாக அறிந்து தெரிந்துகொள்வதற்கு முன், அதன் அடிப்படை தெரிதல் அவசிமானது.

அரிதான சில போஸ்டர்கள், நாம் பார்த்தறியாத விளம்பரங்களின் கவனம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. லூமியர் சகோதரர்களின் திரைப்படக்காட்சி நடைபெற்ற விக்டோரியா ஹாலின் சித்தரிப்பு இருக்கிறது. சினிமாவின் வசதியான கட்டத்தில் நாம் இருக்கிற இந்த வேளையில் அதன் ஆரம்ப கடினம் இந்தப் புத்தகத்திலிருந்து புரிபடுகிறது.

மவுனப் படங்களின் வரிசைப்பட்டியல் நீங்கள் இதற்கு முன் பார்த்தறியாதது. நம் முன்னோர்களை மறப்பதற்கில்லை. அவர்களின் கடின உழைப்பில் வந்த சிறுபாதையையே நாம் ராஜபாட்டையாக மாற்றியிருக்கிறோம். சிறு புத்தகம்தான், உள்ளே சென்று விரைவில் வெளிவந்துவிடமுடியும். ஆனால், கிடைக்கும் தகவல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

நன்றி: குங்குமம், 2/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *