21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி
21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி, யுவால் நோவா ஹராரி, பெங்க்வின் ராண்டம் ஹவுஸ், விலை: ரூ.799
குரங்கினத்திலிருந்து உருவான மனித இனம் பற்றிப் பேசிய ‘சேப்பியன்ஸ்’, கூரறிவு வாய்ந்த மனிதனின் எதிர்காலம் பற்றிப் பேசிய ‘ஹோமோ டூஸ்’ ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து வரலாற்றறிஞர் யுவால் எழுதியுள்ள இந்நூல் இன்றைய உலகின் சவால்களை அலசுகிறது. இன்றைய உலகின் அறிவுத் திறனோடு கூடவே அதன் மூடத்தனங்களையும் விரிவாக இந்நூலில் அலசுகிறார்.
தினமும் கண்விழித்த நேரத்திலிருந்து உறங்கச் செல்லும் நேரம் வரை நம்மை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பங்கள், பேதங்கள் நிரம்பிய மதம், அரசியல், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் நமது எதிர்காலம் குறித்து எத்தகைய பாடங்களை நம் வருங்கால சந்ததியினருக்கு இன்றைய மனிதன் விட்டுச்செல்லப்போகிறான் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
– வீ.பா.கணேசன்
நன்றி: தமிழ் இந்து, 28/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818