64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், பக். 288, விலை 275ரூ.

சக்தி தெய்வ வழிபாடு வழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர், வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார். யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார்.

ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், தத்துவம் பற்றியும் ஆராய்ந்துள்ளார். ஆவுடையார் பெண் குறி, அதன் மீது எழுந்த லிங்கம் ஆண் குறி. ஆணும், பெண்ணும் கலப்பதே யோகம். இதையே யோகமாயாதேவி விளக்குகிறார். பல்வேறு யோகினியார் வடிவங்கள், நூலின் கடைசி பக்கங்களில் காட்சி தருகின்றன. அற்புதமான ஆய்வு நூல்.

-முனைவர் மா.கி.ரமணன்.

நன்றி: தினமலர், 24/6/2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.