தோழமைக் குரல்
தோழமைக் குரல், ஆளூர் ஷானவாஸ், கரிசல் பதிப்பகம், வேளச்சேரி, சென்னை 42, விலை 250ரூ.
தொல். திருமாவளவன் இஸ்லாமிய சமூகத்திற்காக ஆற்றியிருக்கும் களப்பணிகளை விவரிக்கிறது இந்நூல். 1990களிலிருந்து அவருடைய உரைகள், அறிக்கைகள், தலையங்கம், கட்டுரைகள் மூலம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்திருப்பது பதிவாகியிருக்கிறது.
—-
நமோ நாமம், கோவி. லெனின், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ.
குஜராத்தில் மோடியின் ஆட்சியில் வறுமை, பெண்களின் நிலை, மது விலக்கு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை இந்நூல் ஆராய்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் மோடிக்கு சாதகமாக செயல்படுவது, அதே சமயம் குஜராத்தின் சிறப்பான நிர்வாகத்தின் காரணங்களையும் பதிவு செய்கிறது.
—-
வைகோ கடிதங்கள் (பாகம்3), அருணகிரி, ஸ்ரீ சிவகாசி ரவிஜி, மனுச்சி ஃபைன் ஆர்ட்ஸ், சிவகாசி, விலை 50ரூ.
வைகோவின் கடிதங்களில் பொது அறிவுச் செய்திகள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் விளையாட்டு ஆர்வலரான வைகோ ஒலிம்பிக், கால்பந்து போட்டிகள் பற்றி எழுதியிருக்கும் கடிதங்கள் விளையாட்டு ரசிகர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளன. நன்றி: இந்தியாடுடே, 29/1/2014.