என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள், சுமதிஸ்ரீ, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 96, விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-7.html
சுமதிஸ்ரீ, சிறந்த பேச்சாளர், சிறுவயது முதல் தான் அனுபவித்த கேட்ட, ரசித்த பல்வேறு விஷயங்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். வாழ்வின் உயர்வுக்கு எவை வேண்டும் என்பதை தனது அனுபவத்தின் வாயிலாக அழகிய நடையில் வாரி வழங்கியுள்ளார். பட்டுக்குட்டியின் பட்டுப் பாவாடை தொடங்கி அறுந்த செருப்பும், இறந்த மனிதனும் என்னும் 13 தலைப்பில் அவரது அனுபவப் பாடங்கள் விரிகின்றன. திருடாமலேயே திகார் ஜெயிலுக்குப் போனமாதிரி இருந்தது, காதுகள் கதவின்றி படைக்கப்பட்டிருந்தாலும், காயசண்டிகை கண்ணப்பா ஹோட்டலுக்குள் நுழைந்ததுபோல், மேனி மயக்கமும், பொழுதொரு வண்ணம் வாந்தியுமாக நாட்கள் கழிந்தன போன்றவை எதார்த்த வரிகள். உண்மையில் குழந்தைகள் நம்மை பிரசவிக்கிறார்கள். குழந்தை பிறந்தால்தான் அவள் தாய். இல்லையென்றால் அவள் வெறும் பெண்தான். குழந்தை பிறந்தால்தான் தகப்பன். இல்லையென்றால் அவன் வெறும் ஆண்தான். அதனால்தான் குழந்தைகளைக் கொஞ்சும்போது என்னைப் பெத்தவளே எனக் கொஞ்சுகிறோம். இப்படி கருத்துப் பெட்டகமாக வலம் வரும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 3/3/2014.
—-
அக்கு பஞ்சர் உடற்கூறுகளும் உணவுமுறைகளும், ஈஸ்வரி ரகு, ஆர்.எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ.
நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை. நம் உடம்புக்குள்ளேயே இருக்கிறது என்பதை கற்பிக்கும் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம் குறித்து அபூர்வ புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். நோய்களில் இருந்து குணம் பெறவும், ஆரோக்கிய வாழ்விற்கும் வழிகாட்டும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மருந்தே இல்லாமல் இந்த மருத்துவமுறை கையாளப்படுவதால் பக்கவிளைவுகள் இல்லாதது என்பதும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/2/2014.